UPDATED : ஆக 26, 2026 07:18 PM
ADDED : ஆக 26, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று தேர் திருவிழா நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கிருஷ்ணா காயத்திரி ேஹாமம், ஹயக்ரீவ ேஹாமம், ராம காயத்திரி ேஹாமம், சுதர்சனேஹாமம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
