/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

ADDED : பிப் 16, 2024 06:59 AM

காரைக்கால் : காரைக்கால் கீரைதோட்டம் ஒப்பிலாமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி விசாலாட்சி,61; கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், திடீரென மூதாட்டியின் முகத்தில் துணியால் மூடி, அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர்.
விசாலாட்சி கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூவரும் தப்பினர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த கண்ணன்,62; அவரது மகள் சங்கீதா,28; இவரது கணவன் சசிகுமார்,32; ஆகிய மூவரும் ஈரோடு பகுதியில் தங்கி வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல் தனியாக உள்ள நபர்களிடம் கொள்ளையடித்து வருவது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.