/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்த பூசாரி மீது கொலை முயற்சி வழக்கு
/
தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்த பூசாரி மீது கொலை முயற்சி வழக்கு
தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்த பூசாரி மீது கொலை முயற்சி வழக்கு
தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்த பூசாரி மீது கொலை முயற்சி வழக்கு
ADDED : டிச 22, 2024 07:31 AM
சின்னசேலம் : அம்மகளத்தூர் கிராமத்தில், தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்து நண்பர் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்ட பூசாரி மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது குடும்ப நண்பர் முரளி,45; கணேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அங்காளம்மன் கோவில் அமைத்து பூஜை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த கணேசன் மகன் கண்ணனை பூசாரி முரளி எழுப்பி, பூஜை செய்த தீர்த்தம் என கூறி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் அனைவருக்கும் நெஞ்சு எரிச்சல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பூசாரி முரளியிடம் போலீசார் விசாரித்ததில் ' எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டதால், கோவில் வெண்கல சிலை பாலிஷ் போடும் ரசாயன பவுடரை தீர்த்தத்தில் கலந்து குடித்து விட்டேன். நான் இறந்து விட்டால் தனக்கு இத்தனை ஆண்டு காலம் அடைக்கலம் கொடுத்த கணேசன் குடும்பத்தாருக்கும் பிரச்னை ஏற்படும் என கருதி அவர்களுக்கும் விஷம் கலந்த தீர்த்தத்தை கொடுத்து விட்டேன்' என கூறியுள்ளார்.
இது குறித்து மேல் சிகிச்சையில் உள்ள கணேசன் குடும்பத்தாரிடம் கீழக்குப்பம் போலீசார் விசாரணை செய்தனர். பின், பூசாரி முரளி மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.