ADDED : ஆக 03, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித் துறை ஒர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன் சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் வெங்க டேசன் தலைமை தாங்கி னார். துணைத்தலை வர் பெலவேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்பாட்டத்தில் அரசு துறைகளில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.