ADDED : டிச 09, 2025 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஓய்வூதியர்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் நிலுவைத் தொகையை வ ழங்ககோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க பொருளாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் பழனியப்பன், கோபிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பென்ஷன்தாரர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடி யாக வழங்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை, பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.
மாதாந்திர பென்ஷனை தடையின்றி குறித்த நேரத்தில் பெறுவதற்கு அரசு கருவூலம் மூலமாக பென் ஷன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

