/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தணிக்கை முதன்மை கணக்காளர் அலுவலக விழிப்புணர்வு நடைபயணம்
/
தணிக்கை முதன்மை கணக்காளர் அலுவலக விழிப்புணர்வு நடைபயணம்
தணிக்கை முதன்மை கணக்காளர் அலுவலக விழிப்புணர்வு நடைபயணம்
தணிக்கை முதன்மை கணக்காளர் அலுவலக விழிப்புணர்வு நடைபயணம்
ADDED : நவ 20, 2024 05:22 AM

புதுச்சேரி : தமிழகம் மற்றும் புதுச்சேரி தணிக்கை முதன்மை கணக்காளர் அலுவலகம் சார்பில், தணிக்கை வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் (வாக்கத்தான்) நடந்தது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடந்த பேரணியை, சபாநாயகர் செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பொது கணக்கு குழு தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத்சவுக்கான், அரசு செயலர்கள் ஆஷிஷ் மாதோராவ் மோரே, ஜெயந்தகுமார் ரே முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புதுச்சேரி மாநில முதன்மை கணக்காளர் ஜெனரல் ஆனந்த், தணிக்கை தலைமை இயக்குநர் திருப்பதி வெங்கடசாமி, மூத்த துணை கணக்காளர்கள் ஜெனரல் ஆபிரகாம் ஜூடோ செபாஸ், வங்களா சுலலிதா ரெட்டி, மதுபாலா, சுதாகர், ஜெயஸ்ரீ வெங்கட்ராமன், முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பள்ளி மாணவர்களுக்கு தணிக்கை உணர்திறன் திட்டம் சார்பில், பொது நிதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

