/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் 'சைக்கிளத்தான்'
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் 'சைக்கிளத்தான்'
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் 'சைக்கிளத்தான்'
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் 'சைக்கிளத்தான்'
ADDED : அக் 13, 2025 06:36 AM

வானுார்; ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த 'சைக்கிளத்தான்' போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில்லில், உலக கார் இல்லாத தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கிரீன் ரைடர்ஸ்' சைக்கிள் குழுமம் சார்பில், சைக்கிளத்தான் நடத்தப்பட்டது.
ஆரோவில் செர்ட்டி டூயூடு வளாகத்தில், நேற்று காலை 5:30 மணிக்கு போட்டி துவங்கியது. ஆண்களுக்கு, 65 கி.மீ., 65 கி.மீ., 47 கி.மீ., துாரம் கொண்டதாகவும், பெண்களுக்கு 47 கி.மீ., துாரத்திற்கு சைக்கிளத்தான் நடந்தது. இது தவிர 15 கி.மீ., சைக்கிளத்தான், ஆரோவில் உட்புற சாலையில் நடந்தது.
இதில் மொத்தம் 107 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் பதக்கங்கள், பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அளிக்கப்பட்டன.