ADDED : மார் 01, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, கூட்டு தியான நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் பகுதியில்,. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர், மதம், மொழி, இனம் கடந்து வசித்து வருகின்றனர். இந்நகரம், அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ம் தேதி, உருவாக்கப்பட்டது.
ஆரோவில் நகரம் உருவான 58வது ஆண்டு விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஆரோவில் மாத்ரி மந்திர் எதிரில் உள்ள ஆம்பி தியேட்டரில் போன் பயர் எனப்படும் பெரும் தீ ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது.
இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பங்கேற்று கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
