தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி முதல் நாளில், 282 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி முதல் நாளில், 282 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி முதல் நாளில், 282 ரன்கள் குவிப்பு


ADDED : செப் 29, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

   

புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 282 ரன்கள் குவித்தது.

புதுச்சேரி துத்திப்பட்டு சீசென் மைதானத்தில், இந்திய‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலிய‘ஏ’ அணிகள் மோதும் இறுதி டெஸ்ட் நேற்று துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் செய்த ஆஸ்திரேலிய அணி 282 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இதில், ஆஸ்திரேலிய வீரர் சாம் ஹார்ப்பர் ஏழு பவுண்டரி, மூன்று சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கால் இருந்தார்.

ஆறாவது விக்கெட்டு, லியாம் ஸ்காட்டுடன் 84 ரன்களும், அடுத்த விக்கெட்டுக்க டாட் மர்பியுடன் 89 ரன்களும் சாம் ஹார்ப்பர் நல்ல அடித்தளம் அமைத்தார். இதன் மூலம் 104 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்த ஆஸ்திரேலிய அணியை மீட்டார். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் நாச்சிகேத் பூதே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலிய A 87 ஓவர்களில் 282/7 (ஜேசன் சாங்கா 46, சாம் ஹார்ப்பர் 101 பேட்டிங்,இந்திய A.நாச்சிகேத் பூதே 3/35, ஷம்ஸ் முலானி 3/77)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us