தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் எஸ்.பி., மீது பாலியல் வழக்கு பதிவு

காரைக்கால் எஸ்.பி., மீது பாலியல் வழக்கு பதிவு

காரைக்கால் எஸ்.பி., மீது பாலியல் வழக்கு பதிவு


ADDED : செப் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி., சுப்ரமணியன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் முன்பு எஸ்.பி., யாக பணிபுரிந்தவர் சுப்ரமணியன். அப்போது, அங்கு பணியில் இருந்த திருமணமான 28 வயது பெண் காவலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனிடையே எஸ்.பி., சுப்ரமணியன் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும், அந்த பெண் காவலருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். நள்ளிரவு நேரங்களில் விடியோ அழைப்புகள் மற்றும் ரகசிய உரையாடல், மொபைல் போனில் புகைப்படம் இருந்ததை கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், தனது மனைவியிடம் கோட்ட போது இருவருக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் பெண் காவலர் கடந்த ஜன., 23ம் தேதி பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், அவரது கணவர், தற்போது பணியில் உள்ள எஸ்.பி., சவுசன்யாவிடம் எஸ்.பி., சுப்ரமணியன் மீது பாலியல் புகார் அளித்தார்.

இதையடுத்து, புதுச்சேரி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், எஸ்.பி.,சுப்ரமணியன் மீது விசாரணை குழு அமைப்பட்டது. அதையடுத்து, புதுச்சேரியிலிருந்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில், எஸ்.பி., ரச்சனா சிங், சப் இன்ஸ்பெக்டர் அகல்யா மற்றும் டாக்டர் உள்ளிட்ட குழுவினர் காரைக்கால் எஸ்.பி., அலுவலகத்தில் ரகசிய இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவலர், அவரது தாய், கணவர் மற்றும் உடன் பணியாற்றிய மகளிர் போலீசார் உள்ளிட்ட பலரை தனித்தனியாக விசாரித்து வீடியோ மூலம் வாக்குமூலம் பெற்றனர்.

எஸ்.பி., சுப்ரமணியன் மீது குற்றச்சாட்டு உண்மை தன்மையை இருப்பது உறுதிசெய்த விசாரணைகுழு அறிக்கையை டி.ஜி.பி.,யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக காவல்துறை தலைமை விசாரணை நடத்த புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் சரத்சவுகானுக்கு எஸ்.பி., பாலியல் புகார் குறித்து அறிக்கை அனுப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி கடுமையான ஒழுங்கு நடவடிக்கையாக எஸ்.பி., சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் பெண் காவலர் தாய், சென்னை ஐகோர்ட்டில் எஸ்.பி., மீது புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெண் காவலர் மீது பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி., மீது வழக்கு பதிவுசெய்யப்படுமா, இல்லையா என்று பதில் அளிக்க புதுச்சேரி டி.ஜி.பி., மற்றும் காரைக்கால் சீனியர் எஸ்.,பி., ஆகியோர் அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காரைக்கால் நகர இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் மற்றும் போலீசார் பாலியல் தொல்லை மற்றும் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஸ்.பி.,சுப்ரமணியன் மீது நேற்று வழக்குப் பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us