தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ADDED : செப் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 

பள்ளியின் துணை முதல்வர் கோசலை தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சசிகலா வரவேற்றார். காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா மேரி கண்காட்சியைத் துவக்கி வைத்து பார்வையிட்டு, மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்தார்.

கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மின்சாரச் சேமிப்பு, வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கம்பியில்லா மின்சாரம் கடத்தல், அடர்த்தி ஒப்பீடு, சாலைப் பாதுகாப்பு, குடிநீர் சுத்தீகரிப்பு, நவீன குப்பைத்தொட்டி மற்றும் கணிதச் சூத்திர விளக்கங்கள் உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us