ADDED : செப் 29, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரையை சேர்ந்தவர் சுகுமாறன். இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதால், அவரது மனைவி பெங்களூருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.
அதற்கு, விழுப்புரத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் தான் காரணம் என, நினைத்து, அவர், லாஸ்பேட்டையில் வைத்துள்ள பிரியாணி கடைக்கு சுகுமாறன் சென்றார்.
அங்கு வேலை செய்த முனியனிடம் தகராறு செய்து, அவரை தாக்கிய சுகுமாறன், பிரியாணி கடையை சேதப்படுத்தி சென்றார். டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து சுகுமாறனை தேடி வருகின்றனர்.
