தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா 

தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா 

தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா 


ADDED : செப் 29, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, திரைப்பட இயக்குநர் யார் கண்ணன் எழுதிய ஜென்மம் எக்ஸ் கதைகள் பாகம்–2 நுால் வெளியீடு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. 

புதுச்சேரி தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தமிழச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாஸ், செழியன்குமரசாமி முன்னிலை வகித்தனர். நக்கீரர் தமிழ்ச் சங்கத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். 

விழாவில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான யார் கண்ணன் எழுதிய ஜென்மம் எக்ஸ் கதைகள் பாகம்–2, நுாலை அமைச்சர் சிவக்கொழுத்து வெளியிட, அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முருந்தன் பெற்றுக் கொண்டார். 

முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

இதில், உலகத்தாரகை தமிழ்ச்சங்க தலைவர் சுகந்தீனா, தமிழ் சங்கமம் தலைவர் தாமோதரன், ஆந்திரா தமிழ்ச்சங்க தலைவர் ராம்குமார், நக்கீரர் தமிழ் சங்கத் துணைத் தலைவர் சக்தி பாஸ்கரன் வாழ்த்தி பேசினர்.  திரைப்பட இயக்குநர் யார் கண்ணன் ஏற்புரை வழங்கினார். தமிழ்ச் சங்க பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us