ரெட்டியார்பாளையத்தில் ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ரெட்டியார்பாளையத்தில் ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 29, 2026 06:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி, கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியல் துறை, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரேபிஸ் நோய் கண்டறியும் ஆய்வகம், மாநில சுகாதார இயக்கத்தின் தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டம் சார்பில் ரெட்டியார்பாளையம் போப் ஜான் பால் கல்வியியல் கல்லுாரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முருகவேல், கல்வியியல் கல்லுாரியின் செயலர் ரிச்சர்ட், தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஹர்ஷ் வர்தன் சர்மா, கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரேபிஸ் விழிப்புணர்வு உரை, ரீல்ஸ், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் ரேபிஸ் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கால்நடை பொது சுகாதாரத் துறை தலைவர் பானு ரேகா, பேராசிரியர் அஜய் குமார், உதவிப் பேராசிரியர் நித்யா கேந்துவால் ஆகியோர் செய்திருந்தனர்.
