தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 29, 2026 06:43 PM
வில்லியனுார்: புதுச்சேரி காங்., வில்லியனுார் மாவட்டம் சார்பில், கொம்யூன் பஞ்சாத்து அலுவலம் எதிரே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். வில்லியனுார் தொகுதி பொறுப்பாளர் முகமதுஹசான், வட்டார காங்., தலைவர்கள் கார்த்தி, சத்தியமூர்த்தி, வினாயகம், வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
அதில் தேர்தல் ஆணையர்களின் கருத்துகளைப், புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக, சர்வாதிகாரப் போக்கில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும், பல்வேறு மாநிலங்களின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் குளறுபடிகளுக்கு காரணமான, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர்.
காங்., மாநில பொதுச்செயலாளர் தனுசு, திருமுருகன், செந்தில்குமார், கோபு, காங்கேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
