தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆட்டிசம் டிஸ்லெக்சியா நாளை விழிப்புணர்வு பேரணி

ஆட்டிசம் டிஸ்லெக்சியா நாளை விழிப்புணர்வு பேரணி

ஆட்டிசம் டிஸ்லெக்சியா நாளை விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 16, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆட்டிசம்,டிஸ்லெக்சியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாளை (17 ம்தேதி) கடற்கரை சாலையில் அமைதி பேரணிக்கு நடக்கிறது.

இன்றைக்கு ஆட்டிசம் ஒரு உலகளாவிய பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விஞ்ஞான காலத்திலும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறப்பு அதிகரித்து வருகிறது.பேசும் திறன், முகத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளுதல், கூடிவாழும் தன்மை போன்றவை இல்லாததுதான் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் முக்கிய குறைபாடுகளாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நாளை ( 17 ம்தேதி) காலை 8:00 மணிக்கு புதுச்சேரி பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி சார்பில் அமைதி பேரணி நடக்கிறது.

இது குறித்து பள்ளி முதல்வர் புவனா வாசுதேவன் கூறியதாவது:

பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நன்றாகப் பேசும் திறன் இருக்காது.சில குழந்தைகள் ஓரளவு பேசினாலும் தெளிவாக இருக்காது, மற்றவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது.ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். இதேபோல் கற்றலில் ஏற்படும் குறைபாடே, டிஸ்லெக்சியா.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்படிக்கச் சிரமப்படுவார்கள். புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது.

இது போன்ற குழந்தைகளின் பிரச்னை தீர்வு கண்டு அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும்.அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த அமைதி பேரணியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us