தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை


UPDATED : அக் 08, 2026 07:45 PM

ADDED : அக் 08, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:45 PM ADDED : அக் 08, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி,30; ஆட்டோ டிரைவர். இவருக்கும் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

பாலாஜி அடிக்கடி மனைவியின் நகைகளை அடகு வைத்து மது குடித்து வந்தார். பாலாஜிக்கு வேறு ஒரு பெண்ணிடமும் தொடர்பு இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்றார். லாஸ்பேட்டை வந்த பாலாஜி தனது மனைவியிடம் பணம் கேட்டார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பாலாஜி, மனைவியை தாக்கி, வீச்சரிவாளை காட்டி மிரட்டினார். அவரது மனைவி புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பாலாஜியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us