UPDATED : அக் 08, 2026 07:44 PM
ADDED : அக் 08, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், பாரதியார் சாலை, புதிய பஸ் நிலைய நடை மேடையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 60 வயது நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
