/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
/
லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
ADDED : ஆக 09, 2025 07:28 AM
பாகூர், : லாரி மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் அடுத்துள்ள திருவந்திபுரம் மலை காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார் 43; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் சொந்த வேலையாக, பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
பின்னர், விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை சோரியாங்குப்பம் பழைய பாலம் அருகே சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, பொது மக்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர். இது குறித்து அவரது மகன் கவுதமன் 22; அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இருதயநாதன், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மத்திய பிரசேதத்தை சேர்ந்த அமரேந்திர பட்டேல் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.