தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


ADDED : ஜூலை 08, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மேட்டுப்பாளையம் சி.என்.ஜி., காஸ் நிரப்பும் நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

புதுச்சேரியில் காஸ் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சி.என்.ஜி., பொருத்தும் காஸ் நிரப்பும் பங்க் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் இந்தியன் ஆயில் பங்கில் இயங்கி வருகிறது. இங்கு ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சி.என்.ஜி., காஸ் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதியதாக கடந்த 1ம் தேதி முதல் புதுச்சேரியில் துப்புர பணி மேற்கொள்ளும் கிரீன் வாரியர்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டும் காஸ் நிரப்பபடும் என மற்ற வாகனங்களுக்கு காஸ் நிரப்ப முடியாது என பங்க் தரப்பில் கூறப்பட்டது.

ஆட்டோ தொழிலாளர்களை மரியாதை குறைவாக பேசியதை கண்டித்தும், ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்ப வலியுறுத்தி நேற்று மாலை ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் பங்க் உரிமையாளரிடம் அனைத்து வாகனங்களுக்கும் காஸ் நிரப்ப வலியுறுத்தினர். அதன்பேரில், இரவு 8 மணிக்கு காத்திருந்த வாகனங்களுக்கு கேஸ் நிரப்பப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us