ADDED : செப் 23, 2026 05:44 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்தில், தானியங்கி ஒளியியல் ஆய்வு இயந்திர திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் அடல் இன்குபேஷன் சென்டர் பிஇசி பவுண்டேஷனில் அப்பாசாமி அசோசியேட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டம் சார்பில், தானியங்கி ஒளியியல் ஆய்வு இயந்திரம் அமைக்கப்படடது.
தொடர்ந்து அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார் இயந்திரத்தின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். நிறுவன சந்தை அணுகல், அரசு விவகாரங்கள் பிரிவு துணைத் தலைவர் ராஜிவ்நந்தன், அடல் இன்குபேஷன் சென்டர் தலைமை செயல் அதிகாரி விஷ்ணுவரதன், தலைமை இயக்க அதிகாரி ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த மையத்தின் சர்பேஸ் மவுண்ட் டெக்னாலஜி அசம்பிளி லைன் முழுமையடைந்துள்ளதுடன், இப்பகுதியிலுள்ள தொடக்ககால ஹார்டுவேர் நிறுவங்கள் தாங்கள் வடிவமைத்த பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளை துல்லியமாக பரிசோதிக்கும் வசதியும் கிடைத்துள்ளது.
மேலும், இதுவரை புதுச்சேரியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள், தங்கள் சர்க்யூட் போர்டுகளை சென்னை அல்லது, பெங்களுரூவிற்கு அனுப்பிவிட்டு பரிசோதனை முடிவிற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இங்கு ஒரே நாளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
