ADDED : ஆக 24, 2026 05:20 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆணவி அவிட்டத்தையொட்டி, நாளை (26ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (27ம் தேதி) பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுச்சேரியில் நாளை (26ம் தேதி) ஆவணி அவிட்டத்தையொட்டி ரிக் வேதத்ததை சேர்ந்த பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோடு, வேதாஸ்ரம குருகுலத்தில் நடக்கிறது. காலை 6 மணிக்கு ஒரு பேட்ச், 9 மணிக்கு ஒரு பேட்ச் நடக்கிறது.
அதேபோல், நாளை மறுநாள் (27ம்) தேதி விழாக்கிழமை ஆவணி அவிட்டத்தையொட்டி யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு கருவடிக்குப்பம் குருசித்தானந்த சுவாமி கோவிலில், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 5.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ச் வீதம் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 98423 27791, 98423 29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
