ADDED : ஆக 24, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மீன் வெட்டும் தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ், 52; லோடுமேன் மற்றும் தலத்தெரு பகுதியில் மீன் வெட்டும் தொழிலும் செய்து வருகிறார்.கடந்த 16ம் தேதி வழக்கம்போல் மீன் வெட்டும் இடத்திற்கு தனது பைக்கை நிறுத்தி விட்டு மீன் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
