/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொரட்டாண்டி கோவிலில் ஆவணி அவிட்டம் உற்சவம்
/
மொரட்டாண்டி கோவிலில் ஆவணி அவிட்டம் உற்சவம்
ADDED : ஆக 10, 2025 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆவணி அவிட்டத்தையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், நேற்று காலை கீதாராம் குருக்கள் தலைமையில் ஆவணி அவிட்ட பூஜை நடந்தது. கணபதி பூஜை, மகா சங்கல்பம், காண்டரிஷி தர்ப்பணம், உபாதர்ம ேஹாமம் நடைபெற்றது.
தொடர்ந்து, வேதாரம்பம் லலிதாம்பிகை வேதசிவாதன பாடசாலை மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சீத்தாராமையா உள்ளிட்டோர் பூணுால் மாற்றிக் கொண்டனர். சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், சீத்தாலட்சுமி ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.