/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.சி.சி.,கேடட்களுக்கு விருது வழங்கும் விழா
/
என்.சி.சி.,கேடட்களுக்கு விருது வழங்கும் விழா
ADDED : ஏப் 09, 2025 03:53 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் என்.சி.சி., கேடட்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி ஜி.பி., தலைமையக வளாகத்தில் நடந்த விழாவில், குழு தளபதி கர்னல் மேனன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி என்.சி.சி., குழுவை சேர்ந்த மொத்தம் 57 கேடட்கள், குடியரசு தினவிழா அணிவகுப்பு, அகில இந்தியதல் சைனிக் முகாம், இந்திய நவ் சைனிக் முகாம், தென் மண்டல துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான முகாம்களில் பங்கேற்ற, கேடட்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
என்.சி.சி., குழு புதுச்சேரியின் கேடட்கள் கர்தவ்ய பாதை, மரியாதைக் காவலர், பிரதமரின் பேரணி மற்றும் கலாசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று, குழு நடனம், குழு பாடல்கள் மூலம் பரிசுகளை வென்றனர். இந்திய அளவில் பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், என்.சி.சி., குருப், ஜி.பி., கீழ் உள்ள அனைத்து பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

