/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பிற்கு விருது
/
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பிற்கு விருது
ADDED : மார் 25, 2025 04:04 AM

பாகூர்: அரபிந்தோ சொசைட்டி ஸ்வர்ணிம் புதுச்சேரி சார்பில், உலக நீர் தினம் விழா, கடற்கரை காந்தி திடலில் நடந்தது.
விழாவில், வினோத்குமார் வரவேற்றார். கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தண்ணீர் திருவிழா 2025 பற்றிய கண்ணோட்டம் குறித்து, நல்லாட்சிக்கான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் புரோபிர் பானர்ஜி பேசினார். கயல்விழி நீர் உறுதிமொழி ஏற்றார்.
விழாவில், புதுச்சேரி, விழுப்புரம், ஆரோவில், கடலூர் உயிரி பிராந்தியத்தில், ஈர நிலங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகருக்கு, 2024-25ம் ஆண்டிற்கான, 'ஈரநில சாம்பியன்' என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான விருதினை, கலெக்டர் குலோத்துங்கன், சந்திரசேகரக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்வர்ணிம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, அரபிந்தோ சொசைட்டி ஸ்வர்ணிம் புதுச்சேரி இயக்குனர் ரகுநாத் செய்திருந்தனர்.