தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி டாக்டர் அய்யப்பனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கல்

புதுச்சேரி டாக்டர் அய்யப்பனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கல்

புதுச்சேரி டாக்டர் அய்யப்பனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கல்


ADDED : செப் 28, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அய்யப்பனுக்கு சிறந்த சேவைக்காக ‘இந்தியன் மெடிக்கல் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

டிவெல் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் உள்ள மருந்துவர்களில் சிறப்பான சேவை வழங்கியதற்கான ‘இந்தியன் மெடிக்கல் அவார்ட்’ விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதிற்கு இந்த ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அய்யப்பன் தேர்வு செய்யப்பட்டார். சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லுாரியில் நடந்த விழாவில் டாக்டர் அய்யப்பனுக்கு அவரது மருத்துவ சேவையை பாராட்டி ‘இந்தியன் மெடிக்கல் அவார்ட்’ வழக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்த டாக்டர் அய்யப்பன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் அய்யப்பன், மதர்தெரசா செவிலியர் கல்லுாரி டீனாகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். மேலும், கடந்த 20 ஆண்டுகளக்கும் மேலாக, சுமார் ஒரு லட்சம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று இலவசமாகவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

தொடர்ந்து, சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 5 மாணவர்களை செவிலியர் கல்லுாரியில் படிக்க வைத்து, மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us