கடலுார், புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
கடலுார், புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
UPDATED : செப் 28, 2026 09:49 PM
ADDED : செப் 28, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
கடலுார்:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதையடுத்து, கடலுார், புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில், அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும், அது, 3 நாட்களில் பங்களாதேஷில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையொட்டி, துாரத்தில் புயல் இருப்பதை குறிக்கும் வகையில், கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
