ADDED : அக் 18, 2026 12:33 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலைமாமணி விருதாளர் சங்கம், ஈச் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா தமிழ்ச் சங்க வளாகத்தில் நடந்தது.
விழாவில், புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல பாடகரும், சமீபத்தில் 'வெள்ளந்தி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான கிருஷ்ணமூர்த்திக்கு, ‘ஈச் கோல்டன் ஸ்டார்’ விருதை அமைச்சர் ராஜவேலு வழங்கினார்.
இதில், ஈச் பவுண்டேஷனின் தலைவர் தமிழ்வாணன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருது பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.
பாடகர் கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அகில இந்திய வானொலியின் 'பி- ஹை' தரநிலை கலைஞர் ஆவார். இவர் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
