ADDED : அக் 18, 2026 12:33 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலர் பாலியல் விவகாரத்தில் சஸ்பெண்ட் எஸ்.பி.,யை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக சுப்ரமணியன் பணியாற்றியபோது அங்கு பணியில் இருந்த திருமணமான 28 வயது பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது அவரது கணவருக்கு தெரிய வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு, பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அவரது கணவர் சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணைகுழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் எஸ்.பி., சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் கடந்த செப்., 25ம் தேதி அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காரைக்கால் நகர போலீசார் எஸ்.பி., சுப்ரமணியன் மீது, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
