/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்
/
தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்
தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்
தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்
ADDED : டிச 10, 2024 06:33 AM
புதுச்சேரி: ரியாத் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு, 4 தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் அலுவலக செய்திகுறிப்பு:
ரியாத் நாட்டில், சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் மூலம், ஆசிய பசிபிக் பிராந்திய சமூக பாதுகாப்பு மன்றம் பாதுகாப்பு சேவைகள் வழங்குவது பற்றி நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில் இருந்து தொழிலாளர் காப்பீடு கழகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் செயல்படும், மொபைல் செயலிக்கு ஒரு சான்றிதழும், தொழில்சார் விபத்து, நோய், நிலையான முதலீட்டு அமைப்பு ஆகியவற்றிக்கு மூன்று சான்றிதழ்கள் மொத்தம் 4 தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொழிலாளர் காப்பீட்டு கழக தலைமை இயக்குனர் அசோக்குமார் சிங் சான்றிழ்களை பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.