ADDED : ஆக 16, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்துவிற்கு இலக்கிய வீதி இனியவன் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னைக் கம்பன் கழகத்தின் 52ம் ஆண்டு விழா, சென்னை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு, சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஜெகதர்ரட்சகன் எம்.பி., தலைமை தாங்கினார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் கலந்து கொண்டு, சிறந்த கம்பன் பணிக்காக புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலரும், அமைச்சருமான சிவக்கொழுந்துக்கு இலக்கிய வீதி இனியவன் அறக்கட்டளை விருதினை வழங்கினார். சென்னை மற்றும் புதுச்சேரி கம்பன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
