/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜன 29, 2024 04:11 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தில் கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கங்கப்பட்டன.
முதலியார்பேட்டை, ராமலிங்கம் சுவாமி கோவில், வள்ளலார் மடத்தில், சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், தைப்பூச திருநாள்ஜோதி தரிசன விழா நடந்தது. இதில்பள்ளி மாணவ - மாணவியருக்கான, பரத நாட்டியம், யோகா, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து மடத்தின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ மாநில செயலாளர்வெற்றிச்செல்வம், ஒய்ஸ்மேன் பள்ளி நிறுவனர் சரோஜா பாபு, சமுதாயத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று,வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
மேலும், வள்ளலார் மட அறக்கட்டளையில் நிர்வாகிகள், மூத்த குடிமக்களுக்கு போர்வைகள் வழங்கினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வள்ளலார் யோகா மைய பயிற்சியாளர் ராஜசேகர் மற்றும் பரதநாட்டிய பள்ளி ஆசிரியைகள் விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.