/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர் காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
/
இளைஞர் காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
இளைஞர் காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
இளைஞர் காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 17, 2024 08:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில், மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான டி-10 சாம்பியன்ஸ் மெகா கிரிக்கெட் போட்டி நடந்தது.
ராகுல் எம்.பி.,யின் இந்தியா ஒற்றுமை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவு, பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை துவங்குவதை முன்னிட்டு, தாகூர் கலைக் கல்லுாரி மைதானத்தில் 3 நாட்கள் நடந்த கிரிக்கெட் போட்டியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
இறுதி போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. மாநில இளை ஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன், அகில இந்திய இளைஞர் காங்., தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு முன்னிலை வகித்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பரிசுகள் வழங்கினார். விழாவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மாநில பொதுச் செயலாளர் திருமுருகன், ஏம்பலம் மோகன்தாஸ், இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், தொழிலதிபர் பரந்தாமன் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்., நிர்வாகிகள், செயலாளர்கள் வினோத், மனோஜ், நவ்பல், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஐயப்பன், கார்த்திகேயன்,ஊடகத்துறை தலைவர் தமிழரசன், தொகுதி தலைவர்கள், சரன்குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

