/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடை கண்காட்சி வென்றவர்களுக்கு பரிசளிப்பு
/
கால்நடை கண்காட்சி வென்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : மார் 06, 2024 03:21 AM

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
புதுச்சேரியில் கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை மூலம், உப்பளம் தொகுதியில் கால்நடை, கோழிகள் கண்காட்சி நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகளை வழங்கினார். இணை இயக்குநர் காந்திமதி சிறப்புரை ஆற்றினார். டாக்டர் குமரன் நன்றி கூறினார்.தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், நோயல், ராஜி, செல்வம், விநாயகமூர்த்தி, பொன்னி, ஜோஸ்லின், காலப்பன், இருதயராஜ் , ராகேஷ் , மோரிஸ், ரகுமான் பங்கேற்றனர்.

