
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் வாகன ஓட்டிகள் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேதராப் பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின் குமார் திரிபாதி, எஸ்.பி., மோகன் குமார் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, தொழிற்சாலைக்கு வரும் போது, கட்டாயம் தலைவக்கவசம் அணிந்து வருவதாக, போலீசாரிடம் அவர்கள் உறுதி அளித்தனர்.