/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணைய வழி மோசடி குறித்து விழிப்புணர்வு
/
இணைய வழி மோசடி குறித்து விழிப்புணர்வு
ADDED : செப் 30, 2025 08:09 AM

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மற்றும் ரோட்டரி கிளப் பிரெஞ்சு சிட்டி சார்பில் இணைய வழி மோசடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி காமராஜ் சாலை- அண்ணா சாலை சந்திப்பில் நேற்று நடந்தது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் இணைய வழி மோசடி கும்பலிடம் பொது மக்கள் பணத்தை இழந்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி ரோட்டரி கிளப் பிரெஞ்சு சிட்டி, சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காமராஜ் சாலை- அண்ணா சாலை சந்திப்பில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசார் இணைய வழி மோசடி தொடர்பான பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இதில், ரோட்டரி கிளப் பிரெஞ்சு சிட்டி தலைவர் பரிமளம், செயலாளர் கண்ணன், முன்னாள் தலைவர்கள் கண்ணன், சண்முகம், ராம்பிரகாஷ், உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமரன், உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.