ADDED : டிச 24, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கிருஷ்ணா நகர் மாணவியர் விடுதியில் நல்லாட்சி வாரத்தை முன்னிட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கி, துறையின் மூலம் மாணவியருக்கு 25 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனை மாணவியர் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்று, மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், மாணவியர் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், விடுதி காப்பாளர், ஊழியர்கள் உள்ளிட்ட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.