/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்
/
கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 14, 2025 11:11 PM

வில்லியனுார்: கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாமிற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். நிலை-2 தலைமை ஆசிரியர் பிரகலாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியை பெரோஷியா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதர நிலைய டாக்டர்கள் வர்ஷினி, பாமகள் கவிதா, செவிலியர்கள் சுபலட்சுமி, பரமேஷ்வரி, பிரேமாவதி ஆகியோர் மாணவர்களுக்கு கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்களின் கண் தானம் குறித்த நாடகம், பாடல் மற்றும் வில்லுப்பாட்டு ஆகியன நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியை நிர்மலா தொ குத்து வழங்கினார்.
முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இளஞ்செழியன், சூரியகுமாரி உட்பட பலர் செய்திருந்தனர். ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.