
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மகளிர் பேரவை மற்றும் அவ்வை நகர் மகளிர் சங்கம் இணைந்து மகளிர் மனநல விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பேரவை தலைவி தீபா தலைமை தாங்கினார். தலைவிகள் ரெஹானா பேகம், ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தனர். அருண் பிரவீன், உமா மகேஸ்வரி ஆகியோர், குழந்தைகள், இளம்பருவம் மற்றும் மகளிர் மனநலம் காப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு விளக்கவுரையாற்றினர். இதில், நிர்வாகிகள் பங்காரம்மாள், லலிதா, சாந்தி பிரபாகரன், சார்லெட், தமிழரசி, பச் சையம்மாள், சாரதா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனுராதா கண்ணன் நன்றி கூறினார்.

