ADDED : செப் 17, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் பூமியான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
விழாவில் மகளிர் ஆணைய உறுப்பினர் சுஜாதா வரவேற்றார். மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி தலைமை தாங்கினார். நாராயணசாமி எம்.எல்.ஏ., மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி குழந்தைகள் நல ஆணைய தலைவர் சிவராமன் வாழ்த்திப்பேசினார். சட்ட ஆலோசகர் பூர்ணிமா, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ‘போஷ்’ சட்டம் குறித்து விளக்கினார். மகளிர் ஆணைய உறுப்பினர் அன்பரசி நன்றி கூறினார்.
