ADDED : செப் 23, 2024 06:10 AM

புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக் கிள் ஊர்வலம் நடந்தது.
துாய்மை இந்தியா திட்டத்தையொட்டி உழவர்கரை நகராட்சி, கடந்த 17ம் தேதி முதல் துாய்மையே சேவை என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது.
அதன்படி, துாய்மை பழக்கம் தார்மீக ஒழுக்கம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் துவக்க நிகழ்ச்சி உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலம் எல்லைப்பிள்ளைச்சாவடி, வழுதாவூர் சாலை, கோபாலன் கடை, வில்லியனுார் சாலை வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நகராட்சி அதிகாரிகள், புதுச்சேரி சைக்கிள் ஓட்டுதல் சங்க உறுப்பினர்கள், பிரசிடன்சி மேல்நிலைப்பள்ளி, முத்துரத்தின அரங்கம் மேனிலைப்பள்ளி, ஸ்டன்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.