/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
கண் தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 13, 2024 06:41 AM

புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில், தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் சார்பில், செவிலியர்கள், கண் தொழில் நுட்பவியல் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு செயலி புகைப்பட போட்டி மற்றும் கண் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கண் துறைத் தலைவர் தணிகாசலம் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஷா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், உதயக்குமார், குறைத்தீர்க் கும் அதிகாரி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தி நடந்த புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
கண் சிறப்பு மருத்துவர் ஆரோக்கியம் ஜான் போஸ்கோ, கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும், கண் சிறப்பு மருத்துவர் செந்தமி ழன் ரெனே பங்கேற்று, மாண வர்களுக்கு வினாடி - வினா போட்டிகளை நடத்தினர்.கண் மருத்துவர் பிரணீத்தா தொகுத்து வழங்கினார்.

