ADDED : செப் 22, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துாய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துாய்மை பணி இருவார விழாவையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் ஜெனி கிட்ஸ் பள்ளி இணைந்து, துாய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின.
அரியாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். சாலையை துாய்மையாக வைப்பது, பிளாஸ்டி பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.