ADDED : அக் 15, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கலிதீர்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி தேசிய மாணவர் படை, திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கனகவேல் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, உள்ளிருப்பு அதிகாரி ஜமுனா ஆகியோர் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். தொடர்ந்து புறப்பட்ட ஊர்வலம் கலிதீர்தாள்குப்பம், திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் வழியாக சென்று மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது.
ஏற்பாடுகளை கல்லுாரி என்.சி.சி., அலுவலர் கதிர்வேல் செய்திருந்தார்.