ADDED : நவ 08, 2024 04:59 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சிட்டுக் குருவிகளை பாதுகாப்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கூண்டுகள் வழங்கப்பட்டது.
அருண் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக காலாப்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சிட்டுக் குருவிகளை பாதுகாப்பது பற்றியும், தற்போது மொபைல் போன் டவர் உள்ளிட்ட காரணங்களால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது.
அழிந்து வரும் சிட்டு குருவிகளை வளர்ப்பது, பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு சிட்டுக் குருவிகள் வளர்க்க கூண்டுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
