ADDED : செப் 23, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கினார். சின்னசாமி வரவேற்றார். சுகாதார மேற்பார்வையாளர் சாகிரா பானு, உதவி ஆய்வாளர் அய்யனார், ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுகள், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து கண்தான விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.