ADDED : ஜன 29, 2025 06:17 AM
புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
செவிலிய அதிகாரி குமுதா வரவேற்றார். மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கி, உறுப்பு தானம் செய்வதன் மூலம் இறந்த பின் வாழலாம் எனவும், மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். மருத்துவர்கள் கீர்த்தி லட்சுமி, பூங்குழலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மணவெளி, அய்யனார் கோவில் வீதி சேர்ந்த கிருஷ்ணன், அவரதுமனைவி உமாமகேஸ்வரி, வில்லியனுார் பகுதியை சேர்ந்த லதா ஆகியோர் தங்களின் இறப்புக்கு பின் உடலை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைக்கு வழங்குவதற்கு முன்வந்து பதிவு செய்தனர்.
இதில், உறுப்பு மற்றும் திசுக்கள்தானம் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார், கிராமப்புற செவிலியர் ரோஸ்லின், அட்சயலட்சுமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். செவிலிய அதிகாரி கோவிந்தம்மாள் நன்றி கூறினார்.

