ADDED : பிப் 04, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் மூலம் வில்லியனூர் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் கல்லூரி மற்றும் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாமகள்கவிதை, கலந்துகொண்டு மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் உடலை பராமரிப்பது, பாதுகாப்பது குறித்து பேசினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ், பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

