/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 30, 2025 06:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை சார்பில் இணைய வழி மோசடி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கலந்து கொண்டு, இணைய வழி குற்றங்கள், அதிலிருந்து எவ்வாறு பொது மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பண இழப்பு எந்தந்த முறைகளில் அதிகம் நடக்கிறது. பண இழப்பில் படித்தவர்கள் தான் அதிக அளவில் உள்ளதால், விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி., பாஸ்கரன், பல்கலைக்கழக இயக்குனர் கிளைமேட் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

